தினமும் ஒரு சிறுகதை #2

இதற்கு முன்பு எழுதிய ஒரு பதிவின் தொடர்ச்சியாக…

கருப்பு ரயில் – கோணங்கி

http://azhiyasudargal.blogspot.sg/2011/09/blog-post_29.html?m=0

முதல் வாசிப்பில் இந்த கதை புரியவில்லை. “சிவகாசி” என்ற சாவியை வைத்து தான் இக்கதையை திறக்க முடிந்தது. சிறுவர்களின் இயல்பான விளையாட்டை அற்புதமாக வர்ணித்திருக்கிறார்.

கதை நடுவில் யதார்த்த சித்திரங்களிலிருந்து உருவங்கங்களாக மாறுவது அருமை. கதையின் நடுவில் ஒரு கோடு வரைந்து, இரு பாகங்களாக பிரித்தால், அந்த பாகங்கள் கண்ணாடி பிரதிபலிப்புகளாக இருக்கும் விதத்தில் கதையை அமைத்துள்ளார். ஒரு அற்புதமான Animated Film ஆக இதை எடுக்கலாம். குறிப்பாக கடைசியில் உருவகங்களாக வரும் பத்திகள்.

அவனுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரம் – அசோகமித்திரன்

http://azhiyasudargal.blogspot.sg/2011/02/blog-post_28.html?m=0

எளிமையான நடை கொண்ட கதை. இன்றும் பொருத்தமான கதை. சில சமயங்களில் நாம் செய்யும் சிறு செயல்கள் மற்றோருவருக்கு பெரும் துயரை நிகழ்த்தும் வேளையில் நமது மனதில் எழும் குற்ற உணர்ச்சியை கதை மையமாக கொண்டிருக்கிறது.

அன்பளிப்பு – கு.அழகிரிசாமி

http://azhiyasudargal.blogspot.sg/2011/04/blog-post.html?m=0

கு.அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” மற்றும் “இருவர் கண்ட ஒரே கனவு” சிறுகதைகளையும் படித்த பிறகு, அவர் குழந்தைகளின் உலகை சித்தரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குழந்தைகள் நிஜத்தில் எவ்வாறு இருப்பார்களோ, எப்படி பேசுவார்களோ, அப்படியே இவரின் கதைகளிலும் இருக்கிறார்கள். வீடியோ காமிரா வைத்துக்கொண்டு கதை சொல்லியின் அறைக்குள் நுழைந்து குழந்தைகள் அடிக்கும் லூட்டியை பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது இக்கதையின் ஆரம்ப காட்சி.

கோமதி – கி.ராஜநாராயணன்

https://thoguppukal.wordpress.com/2010/10/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/

முனி சரத்குமார் போன்ற தட்டையான சித்தரிப்புகள் இன்று வரும் நிலையில், பல ஆண்டுகள் முன்பாகவே இக்கதை எழுதப்பட்டது ஆச்சரியம். கோமதியின் குடும்பம் அவளை உதறித்தள்ளிவிட்டது என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். கோமதியின் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு என்றெல்லாம் கதை போகாமல், அந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு கோமதியின் மன நிலை புரிவதுடன் கதை முடிகிறது. ஒரு பக்கம் நல்ல முடிவு என்றாலும் இன்னொரு புறம் இது தப்பித்தலோ என்றும் தோன்றுகிறது. நவீன இலக்கியம் முடிவில்லாமல் முடிப்பது என்ற ஒரு நிலைக்கு வந்துவிட்டதில், இப்படியெல்லாம் முடிப்பதே ஒரு போக்காக போயிற்றோ?

நட்சத்திரங்கள் ஒளிந்துக்கொள்ளும் கருவறை – பவா செல்லதுரை

http://azhiyasudargal.blogspot.sg/2011/03/blog-post_30.html?m=0

எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் அது கருவாக இருக்கும் போது இறந்துவிடுமோ என்ற பதற்றம் எனக்கிருந்ததில்லை. ஆகவே இக்கதையின் அடிநாதத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் மிகை உணர்ச்சியாகவே எனக்கு தோன்றியது. முடிவும் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை.

மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி

http://azhiyasudargal.blogspot.sg/2008/10/blog-post_3258.html?m=0

மாமியாருக்கு அடிபணிந்து போகும் ஒரு அப்பாவி மருமகள். அவள் கடைசியில் போடப்போகும் வோட்டுக்கூட அவளின் மாமியாரின் கை முடிவு செய்வதாக கதை முடிகிறது. வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் மருமகள் நடத்தும் பேச்சுவார்த்தை, வாக்கு சாவடி வெளியே மரத்தில் இருக்கும் கிளியுடன் அவள் நடத்தும் பேச்சுவார்த்தை, வாக்கு சாவடியில் முழு மனிதர்களை காணாமல் வெறும் உடல் உறுப்புகளை மட்டும் காண்பது போன்றவை அற்புதம்!

Leave a Reply

%d bloggers like this: