பதேர் பாஞ்சாலி — எஸ்.ராமகிருஷ்ணன்

Image for post

எஸ்.ராமகிருஷ்ணன் சத்யஜித் ரேயின் “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்தை மய்யமாகவைத்து “பதேர் பாஞ்சாலி — நிதர்சனத்தின் பதிவுகள்” என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதைப் படித்ததும் எனக்கும் சத்யஜித் ரேவிற்குமான உறவை நினைத்து flashback மோடிற்கு போய்விட்டேன்.

நான் முதல் முறை பதேர் பாஞ்சாலி பார்த்தது, NUS நூலகத்தில். வீடியோ டேப்பில் வைத்திருந்தார்கள். அதை வெளியே எடுத்துச் செல்லமுடியாது. நூலகத்தில் இருக்கும் TV-ல் மட்டும் தான் பார்க்கமுடியும். மிக சுமாரான பிரிண்ட். சிறு வயதில் வீட்டிலிருந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியைத் தட்டிக்கொடுத்தால், அவ்வப்போது போனால் போகிறது என்று காட்சிகளை காட்டும். அப்படி இருந்தது. நூலகத்தில் பலமான AC. படம் பார்க்க ஆரம்பித்து 20 நிமிடங்களிலேயே தூங்கிவிட்டேன். முழிப்பு வந்ததும், டேப்பை திரும்பக் கொடுத்துவிட்டு சாப்பிடக் கிளம்பிவிட்டேன்.

சில வருடங்களுக்குப் பிறகு, ரேயின் சிறுகதைகளைப் படித்து பிடித்துப்போய், மீண்டும் பதேர் பாஞ்சாலி பார்க்க அமர்ந்தேன். இம்முறை தூக்கம் வரவில்லை. பார்த்ததும் அப்போது தோன்றிய எண்ணங்களைக் குறித்துவைத்திருந்தேன். அவை இதோ.

  • Had a heavy heart at the end of watching it
  • The old hag in the film reminded me strongly of paatti & the way she spoke and acted was amazingly real. In fact, every actor seems to have lived as the character. Scathingly real portrayals that leave me wondering how the hell he managed to shoot something like this
  • Several scenes in the film where the characters don’t see eye-to-eye when they talk & yet it adds intimacy and impact to the conversation
  • Little things like people scratching their feet while walking or looking up at the sky while going down a road — adds to the natural feel
  • Excellent background music — gives a poetic feel to the whole film
  • The transition of Apu’s mother from a very pretty woman to broken & helpless was very well done
  • The death of Durga left a lump in my throat
  • I could feel the splendour & grandeur of the train in the scene where Durga and Appu first see it — mainly because of the buildup to the scene I feel
  • Need to go back and study the camera placement and movement — never felt its presence.
  • Expectant now to watch the other 2 films to see what is it that Appu does

எஸ்.ராவின் புத்தகத்தின் முதல் அத்தியாயம் படிக்கும் போது, படம் அவருள் ஏற்படுத்திய பாதிப்பை என்னால் உணர முடிந்தது.

Image for post
எஸ்.ராவின் புத்தகத்தின் முதல் அத்தியாயம் படிக்கும் போது, படம் அவருள் ஏற்படுத்திய பாதிப்பை என்னால் உணர முடிந்தது.

“அதுவரை மனதில் இருந்த ஆங்கில படங்களின் சாகசங்கள் யாவையும் ஒரேயொரு ராட்சச அலை வந்து அடித்து இழுத்துச்சென்றுவிட்டது.” எனச் சொல்கிறார். எனக்கும் அதே தான். அதுவரை நான் Christopher Nolan, Alfred Hitchcock போன்ற இயக்குநர்களின் தீவிர ரசிகன்.

Nolan படங்களைத் திரும்ப திரும்பப் பார்த்து, அவை பற்றி நண்பர்களுடன் விவாதித்து, வியந்து உட்கார்ந்துகொண்டிருப்பேன். ஆனால் ஒரேயொரு படத்தின் மூலம், ரே என் மனதில் இவர்கள் எல்லோரை விடவும் பெரிய உருவம் எடுத்து நின்றுவிட்டார். அண்மையில் Nolan-ன் Dunkirk படம் வெளிவந்தபோது, சென்று பார்க்கக்கூட தோன்றவில்லை. ரேயின் நேர்காணல்களும், அவரின் Our Films Their Films புத்தகமும், பதேர் பாஞ்சாலியின் மொழியாக்கமும் படிக்க தோன்றுகிறது.

Image for post
ரேயின் நேர்காணல்களும், அவரின் Our Films Their Films புத்தகமும், பதேர் பாஞ்சாலியின் மொழியாக்கமும் படிக்க தோன்றுகிறது.

“விபூதிபூஷணின் நாவலில் மொத்தம் 300 கதாப்பாத்திரங்கள். அவற்றில் தேவையற்றதை நீக்கி, 30 ஆக்கினேன்,” என்று சத்யஜித் ரே சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. “பதேர் பாஞ்சாலி” நாவலை நான் படித்ததில்லை. ஆகவே நாவலுக்கும் திரைப்படத்துக்கும் என்ன வித்தியாசங்கள் என்று, எஸ்.ரா ஆங்காங்கே குறிப்பிட்டது பிடித்திருந்தது. உதாரணத்திற்கு, பாட்டி இந்திராவிற்கும், துர்காவிற்குமான உறவு.

Image for post
பாட்டி இந்திராவிற்கும், துர்காவிற்குமான உறவு
Image for post
அப்புவின் பிறப்பு
Image for post
துர்காவின் மரணம்

இன்னொரு நல்ல விஷயம் — பதேர் பாஞ்சாலியின் கரு வழியாகப் பிற உலக திரைப்படங்கள் பற்றியும் எஸ்.ரா எழுதியுள்ளார்.

Image for post
பதேர் பாஞ்சாலியின் கரு வழியாகப் பிற உலக திரைப்படங்கள் பற்றியும் எஸ்.ரா எழுதியுள்ளார்

பதேர் பாஞ்சாலி காட்சிகளின் வாயிலாக அவரின் பால்யத்தை பற்றியும் சொல்லியிருக்கிறார்.

Image for post
பதேர் பாஞ்சாலி காட்சிகளின் வாயிலாக அவரின் பால்யத்தை பற்றியும் சொல்லியிருக்கிறார்.

பதேர் பாஞ்சாலி மீதும், துர்கா மீதும் பேரன்புடன் எஸ்.ரா எழுதியிருந்தாலும், இந்தப் புத்தகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாகத் தோன்றியது.

  1. அவசர வடிவம் — பதேர் பாஞ்சாலியைப் பற்றிய அறிமுகமா இல்லை அவதானிப்பா என்று முடிவெடுக்காமல் தவிக்கிறது இந்த புத்தகம். மொத்த பக்கங்களில் 30%, படத்தில் வரும் காட்சிகளை வார்த்தைகளில் விவரித்திருக்கிறார். இது ஏற்கனவே படத்தை பார்த்தவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.
  2. கூறியது கூறல். முழு புத்தகத்தையும் எடிட்டிங் செய்து, 2 சிறப்பான நெடுங்கட்டுரைகளாக எழுதியிருந்தால், தாக்கமும் அதிகம் இருந்திருக்கும். எழுத்துப் பிழை, அச்சுப் பிழை — எஸ்.ரா விடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் மனதிற்கு நெருங்கிய கலை படைப்பைப் பற்றி எழுதும்போது கூடுதல் அக்கறை வேண்டாமா?
  3. “உலக சினிமானாலே போர் மாப்ள!” என்கிற பொது புத்தியை இந்தப் புத்தகத்தின் நடை மீண்டும் வலியுறுத்துகிறது.

“உலக சினிமா புத்தகம் போடுவது ஒரு ட்ரெண்டாகி விட்டது!”

என் நண்பர் கணேஷ் ஒரு நாள் சொன்னது இது. உண்மை தான். சிங்கையில் ஒரு புத்தகக்கடை மூடப்பட்டபோது, அங்கு மீதமிருந்த புத்தகங்களில் பல பேர் எழுதிய உலக சினிமா புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அறிமுக நூல்களாகத்தான் இருந்தன. சிறந்த படங்களை பட்டியலிட்டு அவை பற்றி சில குறிப்புகள் இருக்கும். இணையம் வந்த பிறகு இது போன்ற நூல்கள் தேவையே இல்லை. Taste of Cinema போன்ற இணையதளங்கள் பல்வேறு திரைப்பட லிஸ்டுகளை வைத்துள்ளன.

வீடியோ கட்டுரை

சினிமா பற்றி கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிய காலம் கப்பலேறி போயாச்சு. யூட்யூப் போன்ற தளங்கள் வந்த பிறகு, வீடியோ கட்டுரை (Video essays) ஒரு நல்ல வடிவமாக உருவாகிவிட்டது. 21ம் நூற்றாண்டுக்கே உரிய வடிவம் இது. காட்சியை வார்த்தைகளில் விவரித்துவிட்டு, அதைப் பற்றி தனது கருத்துக்களை எழுதுவதற்குப் பதில், காட்சியை காண்பித்து, தனது கருத்தை voiceover ஆகச் சேர்க்கலாம். சினிமாவை ஆராய இதுவே உகந்த வடிவம். உதாரணத்திற்கு, இந்த இரு வீடியோக்களை பாருங்கள்.

  1. இந்த வீடியோ கட்டுரை, பாலச்சந்தரின் “வறுமையின் நிறம் சிவப்பு” படத்தில், கதவுகளின் பங்கை ஆராய்கிறது.
https://www.youtube.com/watch?v=bqB_A38KhzY

2. இந்த வீடியோ கட்டுரை அகிரா குரோசாவாவின் படக்காட்சிகளில் வரும் அசைவுகளை ஆராய்கிறது.

இவ்விரண்டு வீடியோ கட்டுரைகளும் சொல்ல வரும் விஷயத்தை எழுத்தில் சொல்ல சாத்தியமே இல்லை. எழுத்தைப் பற்றி எழுத்தில் கருத்து தெரிவிப்பது போல, சினிமாவை பற்றி அதே ஊடகத்தின் வழியாகக் கருத்து சொல்வது உகந்தது.

இது போன்ற முயற்சிகள் தமிழில் முன்னெடுக்க வேண்டும். காமிராவை நேராகப் பார்த்து “விமர்சனம்” சொல்வது மட்டும்தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அப்படியில்லாமல், எஸ்.ரா இப்புத்தகத்தில் கூறியுள்ள விஷயங்களைக் கூட 15 நிமிட வீடியோ கட்டுரையாக செய்யலாம்.

சொல்லாமல் விடுபட்ட விஷயங்கள்

இந்தப் புத்தகத்தை படித்ததில் எனக்கு சந்தோஷம் அளித்த இன்னொரு விஷயம் உண்டு. மூன்று அப்பு படங்களின் பிரிண்ட்களுமே (பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அப்புர் சன்ஸார்) Criterion Collection எனும் அமைப்பால் சீரமைக்கப்பட்டு, சிங்கப்பூர் திரையரங்குகளில் சென்ற வருடம் திரையிடப்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு படம் என 3 நாட்கள் நடைபெற்றது. 3 நாட்களும் சென்று, ஒவ்வொன்றாகப் பார்த்து, அந்த நாட்கள் முழுதும் இப்படங்களைப் பற்றி படித்து யோசித்த அனுபவம் என்றும் மறக்காது. அப்போது எனக்குத் தோன்றிய பல எண்ணங்களை எஸ்.ரா இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவற்றை நான் சொல்வதற்காக விட்டுவைத்திருக்கிறார். மகிழ்ச்சி!

மேலும் படிக்க

அப்புவின் வீட்டு சுவரில் இருந்த கிறுக்கலை பற்றி

ரேவின் “மகாநகர்” திரைப்படமும், “அபதாரணிக்கா” சிறுகதையும் ஓர் ஒப்பீடு

Our Films Their Films

Image for post

சத்யஜித் ரே எழுதிய பல சினிமா கட்டுரைகளின் தொகுப்பு இது. சினிமா குறித்த பார்வை, தன்னுடைய சினிமா எப்படி இருக்கவேண்டும் என அவர் நினைத்தார், மற்ற நாடுகளின் திரைப்படங்களை பற்றி அவரின் கண்ணோட்டம் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. புத்தகம் வாங்க இணைப்பு

Satyajit Ray Essays (1970–2005)

Image for post

Gaston Roberge என்பவர் சத்யஜித் ரேவை சந்தித்து, அவரை நேர்காணல் எடுத்து, அவர் படங்களை பற்றி உரையாடி, பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளின் தொகுப்பு தான் இப்புத்தகம். ரேவின் முக்கியமான பல படங்களையும், அவர் படங்களின் பொதுவான அம்சங்கள் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு, பிறகு அப்படத்தைப் பற்றி இவர் எழுதிய கட்டுரையை படிப்பது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது. புத்தகம் வாங்க இணைப்பு.

14 Stories that Inspired Satyajit Ray

Image for post

ரேயின் பல படங்கள் சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தழுவி எடுக்கப்பட்டன. இந்தப் புத்தகத்தில் அவர் படமாக்கிய 14 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றாகப் படித்து, பிறகு அந்தந்த சினிமாவை பார்ப்பது, எழுத்தை எவ்வாறு சினிமா வடிவுக்குக் கடத்தலாம் என்பதைக் கற்றுக்கொள்வதற்கான நல்ல பயிற்சி.

புத்தகம் வாங்க இணைப்பு

Leave a Reply

%d bloggers like this: